சனி, 12 ஜூன், 2010

மனித உரிமைவாதிகள் மாவோயிஸ்ட் ஆதரவாளர்களா?

மனித உரிமை போராளி பினாயக் சென்


மது மத்திய இந்தியாவில் நக்சல்பாரிகள் என்று அழைக்கப்படும் மாவோயிஸ்டுகளின் இயக்கம் அரச படைகளுக்கு பெரும் சவாலாக வளர்ந்து வருகிறது. பாரத பிரதமர் மன்மோகன் சிங் ‘மாவோயிஸ்டுகள் இந்தியாவின் உள்நாட்டு பாதுகாப்புக்கு பெரும் அச்சுறுத்தல்’ என்று வெளிப்படையாக சமீபத்தில் அறிவித்துள்ளார். கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் தீவிரவாதிகள் என்று மாவோயிஸ்டுகளை அழைத்து வந்த ஆங்கில காட்சி ஊடகங்கள் கடந்த ஓராண்டில் சிகப்பு பயங்கரவாதிகள் என்று பெயர் மாற்றி அழைக்கத் துவங்கி விட்டன. CNN IBN ஆங்கிலத் தொலைக்காட்சி நக்சல் என்ற ஆங்கில எழுத்தில் வரும் ஓ என்ற சொல்லை பெரியதாகக் காட்டி அது ஒழிக்கப்பட வேண்டியது என்பதை வெளிப்படுத்தி வருகிறது.

புதன், 5 மே, 2010

இந்தியாவின் மோசமான அச்சுறுத்தல்

-ஜி எஸ்.வாசு (ஆசிரியர் தி நியு இந்தியன் எக்ஸ்பிரஸ்-ஆந்திரா)

"தென் அமெரி்க்காவை புரட்டிப் போட்ட சந்தை பொருளாதார அடிப்படை வாதத்திலிருந்து நாம் கற்றுக் கொள்ளா விட்டால் தற்போதைய பொருளாதார கொள்கையே நமது சீரழிவிற்கும் காரணமாக இருக்கும்"
கடந்த மாத மத்தியில் சட்டீஸ்கர் மாநிலத்தின் தண்டேவாடாவில் மத்திய ரிசர்வ் காவல் படையினர் மாவோயிஸ்டுகளால் தாக்கப்பட்டதை தொடர்ந்து நடத்தப்படும் விவாதங்கள் வேடிக்கையாக இருக்கிறது. 

சனி, 24 ஏப்ரல், 2010

ஈழத்தமிழர்களைக் கொன்றொழிக்க புலிப்பூச்சாண்டி! இந்தியப் பழங்குடி மக்களைக் கொன்றொழிக்க மாவோயிஸ்ட் பூச்சாண்டி!

அன்பிற்கினிய நாட்டுப்பற்றாளர்களே!
அண்மைக் காலமாக நமது பிரதமர் மன்மோகன் சிங்கும், மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரமும், இந்தியாவின் ‘அன்னை’ சோனியாவும், இவர்களின் ஊதுகுழல்கள் ஊடகங்களும் உலகின் தற்கொலைப் பட்டியலில் அதிதீவிர வளர்ச்சியை எட்டிக் கொண்டிருக்கும் நம் இந்திய மக்களுக்கு ‘மாவோயிஸ்ட் பயங்கரவாதம்’ பற்றிப் பாடம் கற்பித்துக் கொண்டிருந்தது நமக்கு தெரியும்.

செவ்வாய், 30 மார்ச், 2010

இந்தியாவின் இதயத்தின் மீதான போர் ! – அருந்ததி ராய் இந்தியா என்றொரு நாடும், ஒரிசா என்றொரு மாநிலமும் தோன்றுவதற்கு பன்னெடுங்காலம் முன்பிருந்தே, தற்போதைய தென் ஒரிசாவிலிருக்கும் அந்த தாழ்ந்த, தட்டையான மலைத்தொடர், டோங்ரியா கோண்டு இன மக்களின் தாயகமாக விளங்கி வருகின்றது. மலைகள் கோண்டு இன மக்களைக் கவனித்துக் கொண்டன. அம்மக்கள் மலைகளைக் கவனித்துக் கொண்டனர். அவற்றை வாழும் தெய்வங்களாய் வழிபட்டனர். இம்மலைகள் அதில் புதைந்திருக்கும் பாக்சைட் கனிம வளத்திற்காக தற்போது விற்கப்பட்டுவிட்டன. கோண்டு மக்களைப் பொறுத்தவரையில், இச்செயல் கடவுளை விற்பதற்குச் சமமானது. கடவுள் ராமனாகவோ, அல்லாவாகவோ அல்லது ஏசு கிருஸ்துவாகவோ இருந்தால் ”அந்தக் கடவுள் என்ன விலைக்குப் போயிருப்பார்? ” என்று கேட்கின்றார்கள் அம்மக்கள்.